Friday, 16 December 2016

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது
1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். .

ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம். பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது. .

தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை. அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.

இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல; அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது..

தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில். கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை. சுடு செங்கல் இல்லை, பூராங்கல் இல்லை, மொத்தமும் நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே (சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்). .

1,30,000 ton இடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்ப வேண்டும் என்றால் கோவில் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலமாக இருக்கவேண்டும்!!!? அதேபோல் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் (Hollow Tower, அதாங்க கர்ப்பக்கிரகத்துல இருந்து பார்த்தா விமானம் உச்சி தெரியும்). விமானத்தின் உச்சியில் 80 ton (ரொம்பலாம் இல்ல just 72574.779 kg தாங்க) எடையுள்ள கலசத்தை ஏற்ற வேண்டும், இது போக விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் வேறு. கட்டிடக்கலையின் உச்சபட்ச அறிவு இல்லாமல் இது சாத்தியம் ஆயிருக்காது. .

1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்பொது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க கிரனைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்,மேற்கூறிய 80 ton காலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிக பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு, மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும் , இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைபட்டு இருக்கும். .

தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது. கோவிலை ஒரு லட்சத்திற்குக்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் காட்டியுள்ளனர், கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட. . கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம், சற்று யோசித்து பாருங்கள், இன்றைய நிலமையில் டெல்லி நகரில் ஒரு லட்சம் கைதிகளை வைத்து ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், நம் மிலிட்டரி எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும், நம் பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும். ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போகிவிடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் கலவரத்தில் ஈடுபடலாம், தற்கொலை தாக்குதல் நடத்தலாம்.

எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரமஎதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள். . 7 வருடம் கைதிகளை அடக்கிஒடுக்கி வேலை வாங்குவது சாத்தியம் இல்லை,  அதேபோல் மற்ற கட்டிடக்கலை வல்லுனர்களும் மனம்கோணாமல் வேலை செய்ய வேண்டும், மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் HRM எனப்படும் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறை படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்க்கும் கோவில் தான் சாட்சி. .

சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள்,ஆயிரம் ஆயிரம் யானைகள்,குதிரைகள், 1000க்கும் மேற்பட்ட சிற்பிகள், ஓவியர்கள், ஆசாரிகள், கொல்லர்கள், நடனகலைஞர்கள் ,சமையல் வேலையாட்கள், கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

அது போகட்டும்... திடீரென்று ஒரு அரசனால் தன் நாட்டை மிகவும் வளமான நாடாக மாற்றிவிட முடியுமா? அப்படி பார்த்தால் ராஜ ராஜ சோழனுக்கு முன்னாள் ஆட்சி செய்த சோழ அரசர்களும் சிறப்பாக ஆட்சி செய்து தங்களது நாட்டை சிறிது சிறிதாக வளமிக்க நாடாக மாற்றியிருக்கிறார்கள் என்று தானே சொல்ல முடியும்... எது எப்படியோ... சோழர்களின் திறமையை கண்டு வியக்காதவர்கள் இருக்க முடியுமா?

Tuesday, 1 November 2016

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (மாயன்)(Mayans, Incas)உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்பட்டது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுவந்தன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரித்தார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுசின. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியது அபத்தம்.

மாயன்,Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...

#Credit : https://www.facebook.com/photo.php?fbid=556267521186686&set=a.177791089034333.60111.100004103298250

Tuesday, 25 October 2016

பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே !ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள்!

எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும்.

கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 2600 : எகிப்திய தமிழினத்தவராகிய மாயர்களால் பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் 'இடுகாடு' என்று அழைக்கப் பட்டது.

சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது "சிறு இடு".

மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர். பெரும் + இடு = பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது.

தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து, பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் இதற்கு சான்று. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர்.........

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்

Wednesday, 12 October 2016

பழைய இந்து - சீனத்து நாணயத்தாள்

இது வெளியிடப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இதில் 5 என்பது தமிழ் எண்ணிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.


#Credit: https://www.facebook.com/tamilnationality/photos/a.1031076660246827.1073741828.1030820220272471/1234585596562598/?type=3&theater

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம்தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.

பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை.

கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.

அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்தும் உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.

எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது!

இறைப்பணியில் என்றென்றும் ...முருகனடிமை

#Credit: https://www.facebook.com/Puradsifm/photos/a.436114063075998.97666.430388083648596/1213777685309628/?type=3&theater

Wednesday, 5 October 2016

இலங்கை பூர்வகுடி தமிழர்கள்...வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.

இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள்.

இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு.

விஜயன்
இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது.

விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

"வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்!

பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.

சிங்கபாகு, சிகாசிவாலி என்ற பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார். இவர்களுக்கு 16 முறை இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன! (அதாவது 32 குழந்தைகள்)

இந்தக் குழந்தைகளில் மூத்தவன் விஜயன். அவனை பட்டத்து இளவரசனாக சிங்கபாகு நியமிக்கிறார்.

மக்கள் புகார்
விஜயன் மிகவும் கொடூரமானவன். அவன் செய்த அட்டூழியங்கள் பற்றி, மன்னனிடம் மக்கள் முறையிடுகிறார்கள். மகனைத் திருத்த முயற்சிக்கிறார், சிங்கபாகு. ஆனால் விஜயன் திருந்தவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, மக்களைத் துன்புறுத்துகிறான்.

அவன் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போனதால், மன்னனிடம் மக்கள் மீண்டும் முறையிடுகிறார்கள். "விஜயனுக்கு மரண தண்டனை விதியுங்கள்'' என்று வற்புறுத்துகிறார்கள்.

இதன் காரணமாக, விஜயனையும், அவன் நண்பர்கள் 700 பேர்களையும் நாடு கடத்துகிறார், மன்னர். இவர்களை மூன்று கப்பல்களில் ஏற்றி, "எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்தி வாழுங்கள்'' என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார். மூன்று கப்பல்களும் இலங்கையை அடைகின்றன.

அடைக்கலம் கொடுத்த அழகி
விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். இது கி.மு. 543-ல் நடந்தது.

விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.

(குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் "பேரழகு படைத்தவள்'' என்று பொருள். இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்'')

குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள்.

இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

பாண்டிய இளவரசி
விஜயனுடன் இலங்கை சென்ற அவனுடைய 700 நண்பர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான். "ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், சிம்மாசனம் ஏறமுடியும்'' என்று கூறுகிறான்.

இதன் காரணமாக, விஜயனின் நண்பர்கள் மதுரைக்கு செல்கிறார்கள். மதுரை மன்னனுக்கு முத்துக்கள், தங்க ஆபரணங்கள் முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறார். பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 நண்பர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

குவேனியின் கதி
பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

குவேனியை அழைத்து, "நான் பாண்டிய ராஜகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு'' என்று கூறுகிறான்.

இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.

திருமணம்
பாண்டிய ராஜகுமாரியை மணந்து கொண்ட விஜயன், அவளுடன் வந்த 700 பெண்களுக்கும் அமைச்சர்களாக உள்ள தன் நண்பர்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப மணம் முடித்து வைக்கிறான்.

முன்பு கொடியவனாகவும், முரடனாகவும் இருந்த விஜயன் நல்லவனாக திருந்தி, 38 ஆண்டு காலம் தர்மம் தவறாமல் இலங்கையை ஆண்டான். அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

தபால் தலை
1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது...


Friday, 5 August 2016

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம்!

"காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் !


கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்!.

ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !!

தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்".

பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்த அழகிய நகரம்!!.

காவிரியின் வடக்கு கரையோரம் அமைந்த இந்த நகரின் அழகை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "சிலப்பதிகார" நூல் விவரிக்கிறது. இந்த மூழ்கிய இந்த நகருடன் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, வியட்நாம், கம்போடிய, இந்தோனேசியா, வங்காள தேசம், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் நம் சோழ மன்னன் ஆண்டு வந்தான்!! இந்த துறைமுகத்தில் சுமார் 10,000 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தது !!

இந்த நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது.

ஒன்று கடலோரம் இருந்த "மருவுர்பாக்கம்" மற்றொன்று இதன் மேற்க்கே அமைந்த "பட்டினப்பாக்கம்".

இந்த இரண்டு ஊர்களையும் பிரித்த ஒன்று இதன் குறுக்கே அமைந்த ஆக்கிய தோட்டங்கள், இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது!

இது இன்று உள்ள 24 மணி நேர அங்காடிகளை போன்று பகல், இரவு, முழுவதும் செயல்பட்டுள்ளது!! அப்படி என்றால் எவ்வளவு பெரிய முன்னேறிய நகராமாக இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்!! பகல் அங்காடியின் பெயர் "நாளங்காடி", இரவில் நடப்பது "அல்லங்காடி" !!

ஏற்கனவே கூறி இருந்ததை போல கடற்கரை ஓரம் அமைந்த இந்த ஊரில் மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது! இந்த இடத்தில் கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர், என பலர் வாழ்ந்துள்ளனர்! இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பட்டு வியாபாரிகள், மீன், கறி வியாபாரிகள், பானை, தானியங்கள், நகை, வைர வியாபாரிகள் நிறைந்து காணப்பட்டனர் !

பட்டினப்பாக்கம்:

இங்கு அரச குடும்பம், அரசுத் துறை உயர் அதிகாரிகள்,பணக்கார வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர், சோதிடர், ராணுவம், அரண்மனை நடனக் கலைஞர்கள் போன்றவர்கள் இருந்தனர் !!

இங்கு ஐந்து மன்றங்கள் அமைக்கபட்டிருந்தன
(௧) வெள்ளிடை மன்றம்
(௨) எலாஞ்சி மன்றம்
(௩) நெடுங்கல் மன்றம்
(௪) பூதச்சதுக்கம்
(௫) பாவை மன்றம்

இந்த ஊரை மேலும் அழகுப்படுத்தியத் தோட்டங்கள்
(௧) இளவந்திச்சோலை
(௨) உய்யணம்
(௩) சன்பதிவனம்
(௪) உறவனம்
(௫) காவிரிவனம்

பட்டினப்பாலை என்ற சங்க நூல், இந்த நகரின் அழகை பல இடங்களில் விவரிக்கின்றது. அடுக்கு மாடிகளை அப்போதே கொண்ட இந்த நகரில், ஏணிகள் மற்றும் மரப் படிகளால் மேல் மாடிக்கு சென்றுள்ளனர்!! நகரின் எல்லா இடங்களிலும், பல வடிவங்களில் சோழர் கொடிகள் பரந்த வண்ணம் இருந்துள்ளது !!

இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் "சுனாமி" வடிவில் வந்தது இந்த நகருக்கு அழிவு. சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலையால், இந்த நகரை உரு தெரியாமல் அழித்துவிட்டு சென்றது.

மணிமேகலை நூலில் ஒரு இடத்தின் அழிவை இப்படி விவரிக்கின்றது.அதாவது வருடா வருடம் தவறாமல் "இந்திர விழா" கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது.

இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் "சிலப்பதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரத்தை இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது!

இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னுமும் வெளிவராத நம் பெருமைகளும், அரிய தகவல்களும் வெளி வர வாய்ப்புள்ளது!!

தமிழர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும். அதே போன்று நமக்கு பின் வருபவர்களுக்கும் நம் வரலாற்றை கற்பிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.

--
யாழறிவன்..,

#Credit: https://www.facebook.com/photo.php?fbid=579463505533754&set=a.177791089034333.60111.100004103298250&type=3

Tuesday, 26 July 2016

அப்துல் கலாம் - ஒரு சகாப்தம்இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேஷ் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா. இந்தியாவை மிரட்டும் நடவடிக்கையாக இந்தியாவை நோக்கி தனது போர்க்கப்பல்களை அனுப்பியது.

ஆனால் அவை வந்து சேருவதற்குள்ளாக இந்தியப் படைகள் பாகிஸ்தான் படைகளை சரணடையச் செய்தன. போரே முடிந்து விட்டது. மூக்கறுபட்டது போல அமெரிக்கப் போர்க் கப்பல்கள் வந்த வழியே திரும்பிச் சென்றன.

அக்கால கட்டத்தில் இந்தியாவிடம் அணுகுண்டுகள் கிடையாது. அவற்றைச் சுமந்து செல்வதற்கான ஏவுகணைகள் கிடையாது. அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க இந்தியாவிடம் செயற்கைக்கோள்கள் கிடையாது. செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கான ராக்கெட்டும் கிடையாது.

அன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் இந்தியாவிடம் இப்போது அணுகுண்டுகளை சுமந்தபடி 8000 கிலோ மீட்டர் பறந்து சென்று எதிரி இலக்குகளை தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளன. அவற்றை இலக்கு தவறாமல் தாக்குவதற்கு உதவும் ஜிபிஎஸ் வகை செயற்கைக்கோள்கள் உள்ளன.

எதிரிப் படைகளின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிரியின் படைத் தளங்களை துல்லியமாகப் படம் பிடிக்கின்ற செயற்கைக்கோள்களும் உள்ளன.

இன்று நம்மை எதிரி மிரட்டினால் பதிலுக்கு நாமும் மிரட்ட முடியும். இதையெல்லாம் சாத்தியமாக்கியதில் அப்துல் கலாமுக்குப் பெரும் பங்குண்டு

அப்துல் கலாம் பட்டப் படிப்பையும் பட்ட மேல் படிப்பையும் முடித்துக் கொண்டு சில காலம் ராணுவத் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் 1963 ஆம் ஆண்டில் ராக்கெட் எஞ்சினியராக கேரளத்தில் தும்பா என்னுமிடத்தில் அப்போது தான் அமைக்கப்பட்ட சிறிய ஆராய்ச்சி ராக்கெட் கேந்திரத்தில் சேர்ந்தார்.

தும்பாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் தென்னை மர உயரம் கூட இல்லாதவை. வானில் 30 முதல் 180 கிலோ மீட்டர் உயரத்தில் காற்று மண்டல நிலைமை, வான் இயற்பியல் நிலைமைகள் முதலியவற்றை ஆராயும் பொருட்டு ஐ. நா. ஆதரவில் இந்த கேந்திரம் நிறுவப்பட்டது.

தும்பாவில் செயல்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் நிலையம் அமெரிக்காவிலிருந்தும் பிரான்சிலிருந்தும் ராக்கெட் செலுத்து சாதனங்கள், அமெரிக்க, பிரெஞ்சு ராடார்கள், பிரெஞ்சு காமிராக்கள், ரஷிய கம்ப்யூட்டர்கள் முதலியவை இங்கு வந்து சேர்ந்தன. அந்த நாடுகள் கொண்டு வந்த சிறிய ராக்கெட்டுகள் தான் இங்கிருந்து செலுத்தப்பட்டன..

பின்னர் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் இங்கிருந்து செலுத்தப்பட்டன. இது அப்துல் கலாமுக்கு சிறந்த அனுபவத்தை அளித்தது. அவர் இங்கு பணியாற்றிய போது புதிய தொழில் நுட்பங்களையும் உருவாக்கினார்.

பூமியின் காந்த நடுக்கோட்டுக்கு அருகில் தும்பா அமைந்துள்ள காரணத்தால் இங்கு இவ்வித ராக்கெட் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு பணியாற்றிய அப்துல் கலாமும் அவரைப் போன்றவர்களும் ஒரு நாளில் 18 மணி நேரம் கூட வேலை செய்ததுண்டு. குறிப்பாக அப்துல் கலாமின் பணி அப்போதைய விண்வெளித் துறையின் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாயை மிகவும் கவர்ந்தது.

இதற்கிடையே 1969 ஆம் ஆண்டில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி அமைப்பு நிறுவப்பட்டது. நடுவில் வேறு சில திட்டங்களில் பணியாற்றிய அப்துல் கலாம் இஸ்ரோவுக்கு மாற்றப்பட்டார். விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டை உருவாக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான வகையில் 1971 ஆம் ஆண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சிறிய ஆராய்ச்சி ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன. பின்னர் எஸ்.எல்.வி எனப்படும் பெரிய ராக்கெட்டை உருவாகும் பணி மேற்கொள்ளப்பட்டது. திட்ட டைரக்டர் என்ற முறையில் ராக்கெட் தயாரிப்பின் எல்லா பணிகளையும் அப்துல் கலாம் கவனிக்க வேண்டியிருந்தது. எஸ்.எல்.வி என்பது செயற்கைக்கோள் செலுத்து சாதனம் என்னும் பொருள் கொண்ட ஆங்கில சொற்றொடரின் சுருக்கமாகும்.

முதல் முயற்சியாக 1979 ஆம் ஆண்டு ஆகஸ்டில் எஸ்.எல்.வி ராக்கெட்டானது ரோகிணி என்னும் சிறிய செயற்கைகோளை சுமந்தபடி வானில் பாய்ந்த சில வினாடிகளில் தோல்வியில் முடிந்தது. எதிர்பாராத பிரச்சினைகளால் இத்தோல்வி ஏற்பட்ட போதிலும் தோல்விக்கு அப்துல் கலாம் முழுப் பொறுப்பேற்றார். அவர் மனம் துவண்டு விடவில்லை.

1980 ஆம் ஆண்டு ஜூலையில் எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்து ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியது. அதன் மூலம் ராக்கெட் யுகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்தது.

இதற்குள்ளாக அப்துல் கலாம் ராக்கெட்டுக்கான திட எரிபொருள் துறையில் நிபுணர் என்று பெயர் பெற்றவரானார். அந்த முறையில் அவருக்கு அடுத்த பணி காத்திருந்தது. அதாவது நாட்டின் பாதுகாப்புக்கான ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது..ஏவுகணைகள் திட எரிபொருளைப் பயன்படுத்துபவை.

இங்கு செயற்கைக்கோளை செலுத்துகின்ற ராக்கெட்டுக்கும் ஏவுகணைக்குமான வித்தியாசத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டுமே ராக்கெட் தத்துவ அடிப்படையில் செயல்படுபவை.

ஆனால் நாம் பொதுவில் ராக்கெட் என்று வருணிக்கும் செயற்கைக்கோள் செலுத்து சாதனம் குறைந்தது 300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்று ஒரு செயற்கைக்கோளை அசுர வேகத்தில் செலுத்தி பூமியைச் சுற்றும்படி செய்து விட்டால் அதன் பணி அத்துடன் முடிந்து விடுகிறது.

செயற்கைக்கோளை செலுத்தும் ராக்கெட்டில் வெவ்வேறு அடுக்குகளில் திட எரிபொருள் அல்லது திரவ எரிபொருளைப் பயன்படுத்தலாம்.

ஏவுகணையும் சரி, வானை நோக்கிப் பாய்வது தான். அதன் முகப்பில் குண்டு இருக்கும். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரி நிலைகளைத் தாக்குவதற்கான ஏவுகணை என்றால் முகப்பில் நிச்சயம் அணுகுண்டு இருக்கும்.

ஏவுகணையானது மிக உயரத்துக்குச் சென்று நீண்ட தூரம் பறந்த பிறகு எதிரி நிலையைத் தாக்க மறுபடி காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கியாக வேண்டும். அப்படி இறங்கும் போது அதன் முகப்பு கடுமையாகச் சூடேறும்.

அந்த வெப்பமானது முகப்பில் உள்ள அணுக்குண்டைப் பாதித்து விடாமல் பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிரி நிலையைத் தேடி அறிவதற்கான நுட்பமான கருவிகள் இருக்க வேண்டும். அந்த அளவில் ஏவுகணைகளை உருவாக்குவது சிக்கலான பணியாகும்.

இங்கு இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது ஒரு நாடு அணுகுண்டுகளைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் சுமந்து செல்ல ஏவுகணைகள் இருக்க வேண்டும். அதே போல ஏவுகணைகள் மட்டும் இருந்தால் போதாது. அவற்றின் முகப்பில் வைத்துச் செலுத்த அணுகுண்டுகள் அவசியம்.

சீனா 1964 ஆம் ஆண்டில் அணுகுண்டுகளைப் பெற்று விட்ட நிலையில் இந்தியா இனியும் வாளாவிருக்கக் கூடாது என்ற நோக்கில் 1974 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது இந்தியா அணுகுண்டை உருவாக்கி நிலத்துக்கு அடியில் வெடித்து சோதனை நடத்தியது.

ராஜஸ்தான் பாலைவனத்தில் பொகாரன் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அணுசக்தி நிபுணர்களுடன் அப்துல் கலாமும் அங்கு இருந்தார்.

பின்னர் 1998 ஆம் ஆண்டில் இந்தியா நிலத்துக்கடியில் சக்திமிக்க பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த போதும் பொகாரனில் அப்துல் கலாம் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் என்ற முறையில் அங்கு இருந்தார்.

இந்தியா முதல் தடவை அணுகுண்டு சோதனை நடத்திய போது ஏதோ அணுகுண்டு என்பது தங்களது ஏகபோக உரிமை என்று கருதிய வல்லரசு நாடுகள் இந்தியாவைக் கண்டித்தன. இந்தியா அணுகுண்டு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கூறின.

இந்தியாவுக்கு எதிராக அவை பல கட்டுமறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தியாவுக்கு எந்த நாடும் அணுசக்தி துறையில் எந்த உதவியும் செய்யலாகாது என்று தடை விதிக்கப்பட்டது.

பொகாரனில் நடத்தப்பட்ட முதல் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் இந்தியா ஏவுகணைகளையும் தயாரித்தாக வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி இதற்கென நிறைய நிதி ஒதுக்கினார். அப்போது தான் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டம் அப்துல் கலாம் வசம் ஒப்ப்டைக்கப்பட்ட்து. அந்த சமயத்தில் ஆர். வெங்கட்ராமன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

பிருத்வி ஏவுகணை
சில நூறு கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்க வல்ல ஏவுகணை, நீண்ட தூரம் செல்ல வேண்டிய ஏவுகணை, போர்க்களத்தில் பயன்படுத்துவதற்கான சாதாரண ஏவுகணை என பல்வகை ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிகள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெங்கட்ராமன் ஆலோசனை கூறினார்.

இந்தியா ஏவுகணைகளைத் தயாரித்து விடாமல் தடுக்க அப்போது அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய நாடுகள் பல வழிகளில் முயன்றன. ஏவுகணை தயாரிப்புக்கு உதவக்கூடிய எந்தப் பொருளும் இந்தியாவுக்குக் கிடைக்காதபடி அவை தடை விதித்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்தது.

இந்த அத்தனை தடைகளையும் மீறித்தான் இந்தியா ஏவுகணைத் தயாரிப்பில் முன்னேற்றம் கண்டது. ஏவுகணைக்கான குறிப்பிட்ட வகை விசேஷ உருக்கை நாமே சொந்தமாகத் தயாரிப்பதில் வெற்றி கண்டோம் இப்படியாக பல தடைகளும் முறியடிக்கப்பட்டன. இதில் அப்துல் கலாமின் தலைமையிலான குழுவினர் பெரும் பங்களித்தனர்.

ஆரம்ப கட்ட பிரச்சினைகளுக்குப் பின்னர் அக்னி-1 ஏவுகணை, பிருத்வி ஏவுகணை ஆகியவை தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக வானில் செலுத்தப்பட்டன. இரண்டுமே அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடியவை.

அக்னி வரிசையில் பின்னர் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை 5000 முதல் 8000 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பறந்து சென்று தாக்க வல்லது. இந்த ஏவுகணை சீனாவின் வட எல்லை வரை செல்லக்கூடியது. பிருத்வி வரிசையிலும் பல்வேறு திறன் கொண்ட ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது.

அக்னி-5 ஏவுகணை
இவை தவிர, ஆகாஷ், திரிசூல், நாக் போன்ற சாதாரண ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரமிட்டவர் அப்துல் கலாமே. எனவே அவரை ஏவுகணை மனிதர் என்று வருணிப்பது உண்டு.

செயற்கைக்கோள்களை செலுத்த அப்துல் கலாம் உருவாக்கிய எஸ்.எல்.வி ராக்கெட்டின் திறன் பின்னர் மேலும் அதிகரிக்கப்பட்டு பி.எஸ்.எல்.வி ராக்கெட் உருவாக்கப்பட்ட்து. அப்துல் கலாம் ஏவுகணை பக்கம் திரும்பியதற்கு முன்னர் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை உருவாக்குவதற்கும் பங்களித்தார். இந்த ராக்கெட் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது.

இப்போது மேலும் அதிக திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான இந்த ராக்கெட்டுகள் அனைத்தும் ஆக்கப்பணிக்கானவை.

இவை வானிலைத் தகவல் சேகரிப்பு, மேப் தயாரித்தல், இந்தியாவின் இயற்கை வளங்களைக் கண்டறிதல் போன்ற பணிகளுக்கான செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகின்றன.

ஏவுகணைகளை உருவாக்க முக்கிய பங்களித்ததன் மூலம் அப்துல் கலாம் இந்தியாவை இனி எந்த நாடும் மிரட்டத் துணியாது என்ற நிலையை உண்டாக்கியுள்ளதாகக் கூறலாம்.

ஆனாலும் அவர் நமது நாட்டின் எதிரி வறுமையே என்று கருதியவர். அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம் என்று கூறியவர். ஆயுதங்களை உருவாக்கியவர் அமைதியைத் தான் நேசித்தார். குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவியை வகித்த போதும் தமது எளிமை மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த மாமனிதராகத் திகழ்ந்தார்.

#Credit : https://www.facebook.com/photo.php?fbid=1730859437152786&set=a.1721014068137323.1073741828.100006862390323&type=3

பெருந்தலைவர் காமராஜ்ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14 இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...
என்று. தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

#Credit : http://eluthu.com/kavithai/97380.html

Wednesday, 13 July 2016

Friday, 8 July 2016

ஏறுதழுவுதல் - தமிழரின் வரலாறு

தமிழரின் வரலாறு என்ன என்று தெரிய வேண்டும்! தெரியாமல் பேச கூடாது Ban PETA!


ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது.

முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது. பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.

பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர்.

இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை,

'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு 
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை 
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் 
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
 வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
 நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) 

என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.

ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.

வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,

'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் 
முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) 

என்று குறிப்பிடும்.

கலித்தொகை
கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.

பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர்.

ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.

பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான்.

ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

எனவே நம் முன்னோர்கள் பல் உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.

'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் 
புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.103 63-64) 

என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.

கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம்.

காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬ ‪#‎ஆனையூர்ஜீவா‬

Credit :
https://www.facebook.com/jallikattua2z/posts/1242651602413610:0

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..!

Tuesday, 5 July 2016

தமிழருடைய பாரம்பரிய நெல் விதைகள் சேகரிப்பு தொழில்நுட்பம்!இதன் பெயர் கோட்டை, விதைகளை வைக்கோளால் கட்டி அடுத்த நாள் நாட்டுப்பசு சாணியால் மெழுகி வைத்துவிடுவர். 

ஒரு வருடத்திற்கு ஒன்றுமே ஆகாது. 

மேலும் திரும்ப முளைப்பதற்கான தட்ப வெட்பம் இதில் பேணப்படுகிறது. இன்றும் பல கிராமங்களில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழரின் தனித்துவமான அறிவியலை அனைவருக்கும் அறியப்படுத்துவோம். 

நன்றி - இராஜன் நெல்லைThursday, 16 June 2016

ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்கி.பி.(700-720) 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது.


தமிழ் நாட்டின் முதல் கருவறைமேல் விமானம் தாங்கிய கோயில் பல்லவர்கள் குடவரைகோயில்கள் வடிவத்திலிருந்து மாறி புதியவடிவத்தை கண்டுபிடித்தனர், அதுதான் மணற்கற்கல்(sand stone).


இந்த கோயில் முழுவதும் மணற்கற்களால் மட்டுமே கட்டப்பட்டதுள்ளது. இந்த கோயிலை பார்த்தப்பிறகுதான் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது.


இக்கோயிலில் நான்கு வகையான கல்வெட்டு எழுத்துகள் உள்ளன
1.நாகரி எழுத்து
2.கிரந்தம் எழுத்து
3.நன்குஅலங்கரிக்கப்பட்டகிரந்தம் எழுத்து
4.பூ வேலைப்பாடு கொண்ட கிரந்தம் எழுத்து


பல்லவ மன்னன்ர்கள், சோழ மன்னன்ர்கள், விஜயநகர மன்னன்ர்கள், முகாலாய மன்னன்ர்கள் யாருமே இந்த கோயிலை சேதபடுத்தவில்லை.

எங்கு பார்த்தாளும் பிரமிப்பு.


வாழ்க்கையில் ஒருமுரையேனும் ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில் வந்துபாருங்கள்.
-அறம் கிருஷ்ணன்

#Credit : https://www.facebook.com/tamilnationality/


Tuesday, 14 June 2016

உலகில் மதங்கள்

இந்து, கிறீஸ்தவ, பௌத்த, இஸ்லாமிய, சமண, யூத மதங்கள் உருவாகிய விதங்கள் பற்றி ஒரு சில வரிகளில் அறிவோம்...


இந்து மதம்:

இந்தியாவில் காலம் காலமாகப் பலவிதமான தெய்வங்களை, வேறு வேறு சமயப் பெயர்களுடன் வணங்கி வந்தவிடத்து, பிற்காலத்தில் இத்தெய்வங்களிடையே மாமன், மாமி, கணவன், மனைவி, அண்ணன், தங்கை எனப் பல உறவுமுறைகளை உருவாக்கி, அந்தப் பொதுவான அமைப்பினை இந்து மதம் என்று அழைக்கலாயினர். அச்சமயங்களில் முதன்மையாய் நின்றிருந்தது சைவ சமயமாகும். சைவ சமயத்தைச் ஸ்தாபித்தவர் என்று ஒருவரும் இலர். ஒரு 5, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்காலாம். கி.மு.2500-1500 ஆண்டு காலத்தில் இருந்த சிந்து வெளி நாகரிக காலத்திலேயே சிவலிங்க வழிபாட்டை ஒத்த வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன. கி.மு.1500-500 களில் வேதங்கள் எழுதப்பட்டன. பின்னர், கி.மு.500-கி.பி.500 களில்புராண இதிகாசங்கள் இயற்றப்பட்டன.

கி.பி. 500-1500 புராணங்கள் பாடப்பட்டன. இச்சமயத்தை வளர்த்தவர்கள் ரிஷிகள், சமய குரவர்கள், ஆழ்வார்கள் என்று பலர் இருந்தனர். இறைவன் ஆதியும், அந்தமும் இல்லாதவர், உருவமோ, அருவமோ அற்றவர். எங்கும் நிறைந்தவர், எல்லாமாயே இருப்பவர். அளவில்லா அன்பும், ஆற்றலும் கொண்டவர், எல்லா உயிர்களிடத்தும் உறைபவர் என்று விவரிக்கப்பட்டுள்ளார். ஆதலால், ஆன்மா அழிவற்றது, புனிதமானது. இப்பிறப்பில் அறவாழ்வு வாழ்ந்து, தெய்வம் தொழுதால், மறுபிறப்பின்றி மோட்சம் அடையலாம் என்று சைவ சமயம் போதிக்கின்றது.

தொடக்கத்தில் சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு அதிகரித்ததால் சற்றுத் தேக்க நிலை அடைந்து பின்னர் புத்துயிர் பெற்று எழுந்தது. ஆனாலும், பிற்காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பின்போது, மத மாற்றக் கட்டுப்பாடுகள் இந்து சமயத்தில் இல்லாது இருப்பதால். சமூகத்தில் நிலவிய சாதிப் பிரிவினையினால் தள்ளப்பட்டும், பதவி ஆசைகளினால் உந்தப்பட்டும், திருமண பந்தங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டும், சித்திரவதைகளுக்கு அஞ்சியும் பலர் கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறினர்.

கிறீஸ்தவ மதம்:

இதை ஸ்தாபித்தவர் இயேசு கிறீஸ்து நாதர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ரோம சர்வாதிகாரி சீசரின் கீழ் இருந்த இஸ்ரவேல், பெத்தலகேமில், பரிசுத்த ஆவியால் கருவுற்ற மேரி என்னும் தாய்க்கு மகனாகப் பிறந்தார். பிறந்து, 30 வருடங்களாக, தச்சு வேலை செய்யும் ஒரு யூதராகவே வாழ்ந்தார். 30 வயசிலிருந்து இவர் பல நற் போதனைகளையும், அற்புதங்களையும் செய்யத் தொடங்கினார். இவரின் போதனைகள் பல யூத மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருந்தாலும், இவர், தான் கடவுளின் மைந்தன், தானும் கடவுள்தான் என்று பிரச்சாரம் செய்வது யூதக் கொள்கைகளுக்கு எதிராக அமைந்ததால் அது அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டியது.

இதனால், பலவிதமான முயற்சிகளின் பின்னர் தேசாதிபதியால் மரணதண்டனை அறிவிக்கப்பட்டு, அவரைச் சித்திரவதை செய்து, சிலுவையில் அறைந்து அது நிறைவற்றப்பட்டது. என்றாலும், மூன்றாம் நாளில் உயிர் பெற்று எழுந்து மேலும் 40 நாட்கள் நற்போதனையில் ஈடுபட்ட பின்னர் வானத்தில் எழுந்து சென்று மறைந்ததை பலர் நேரில் கண்டனர். இவரின் அன்பை அடிப்படையாகக் கொண்ட போதனைகளால் ஈர்க்கப்பட்ட பெருவாரியான மத்திய கிழக்கு, ஐரோப்பிய மக்கள் கிறீஸ்தவ மதத்தினைத் தழுவினர். இதன் பின்னர் உலகம் எங்கும் சென்று நாடுகளைப் பிடித்துப் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த ஐரோப்பியர்களால் இம்மதம் மேலும் பரப்பப்பட்டது.

இஸ்லாமிய மதம்: 

இதை ஸ்தாபித்தவர் முகமது நபி. இவர் 570ம் ஆண்டு மெக்காவில் பிறந்து, அனாதையாகி மாமனால் வளர்க்கப்பட்டார். இவர்தான் இறைவனின் பல தூதர்களில் மிகவும் கடைசியாக அனுப்பப்பட இருந்த தூதர் என்று இஸ்லாமியர் நம்பினர். இவர் வாணிபம், மந்தை மேய்க்கும் தொழில்களைச் செய்தார். பின்னர் தியானம் செய்து 40 வயதில் இறைவனை உணர்ந்தார். பின்னர், தான் இறைவனிடம் இருந்து பெற்ற வாக்குகளை மக்களிடம் நற் போதனைகளாகப் பரப்பினார்.

எல்லோருமே உண்மையான இறைவனிடம் சரண் அடையவேண்டும், அல்லாதவர்களை ஒழித்து விடவேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டதால், தன் மதத்தில் சேராதவர்கள் மீது 2000, 3000, 10,000 என்னும் எண்ணிக்கை உள்ள போர்வீரர்களுடன் பல தடவை பதுங்கு குழிகள், காவலரண்கள் கொண்டு முழு இராணுவ முறையில் போர் புரிந்து, அவர்களைக் கொன்று, வழிபாட்டுத் தலங்களையும் உடைத்து மதத்தைப் பரப்புவதில் பெரும் வெற்றி அடைந்தார்.
முழு அரேபியாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதும் 632 இல் சுகயீனமுற்று மரணித்தார். இவருக்குப் 19 மனைவியர்கள், 14 நிச்சயார்த்தம் செய்து விடுபட்ட பெண்களும், 10 விருப்பம் தெரிவித்தும் இவரால் ஏற்றுக்கொள்ளாத நங்கைகளும் இருந்தனர் என்று விக்கி பட்டியல் இட்டுள்ளது.

புத்த மதம்:

இதை ஸ்தாபித்தவர் கௌதம புத்தர். இவர் கி.மு 563 இல் சித்தார்த்தர் என்னும் பெயருடைய அரச குமாரனாக இந்தியாவில் பிறந்து, தாயை இழந்து, சிறிய தாயால் வளர்க்கப்பட்டார். இவரை, இவர் தந்தை அரண்மனை சௌகரியங்களில் மூழ்கி வளர்க்க முனைந்தும், இவர் வெளி உலகில் மக்கள் படும் வேதனைகளையும், கஷ்டங்களையும் கண்டு மனம் வெதும்பினார். இந்தத் துயரங்களில் இருந்து மீள என்ன வழி என்று அலைந்து திரியும் போது, 29 வயதில் ஒரு துறவியின் உபதேசம் கிடைத்தது. அதன்படி, தன மனைவி, பிள்ளையை விட்டு, அரச சுகத்தையும் துறந்து வனம் சென்று ஒரு அரச மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்து, 6 வருட முடிவில் ஞானம் பெற்றார்.

மனிதனின் துயரங்களுக்கு அவனின் பேராசைதான் காரணம் என்றும், ஆசையைக் கட்டுப்படுத்தினால் அமைதியும், சந்தோசமும் கிடைக்கும் என்று அறிந்து போதித்தார். வேதக் கருத்துக்கள் பல பிழையானவை என்று வாதித்தார். கடவுளோ, பிரபஞ்சமோ அவை அறியப்பட முடியாதவை; அது எமக்குத் தேவையும் இல்லை. நமக்கு நாமே உண்மையானவர்களாகவும், நியாயமானவர்களாகவும் வாழ்ந்து, கோபம், பற்று, அறியாமை ஆகியவைகளில் இருந்து நீங்கி, கருணை, ஒழுக்கம், அன்பு, நேர்மை உள்ளவராய், மனித குலத்திற்கு சேவை செய்தாலே எமது வாழ்வு ஆனந்தமாக இருக்கும் என்று போதித்தார்.

கடைசியில், தனது 80 வயதில் நோய் வந்து மரணித்தார். இவரின் போதனையால் கவரப்பட்டு இந்திய, ஆசிய பிரதேசங்கள் எங்கும் புத்த மதம் பரவியது.

சமண மதம்: 

இதை பிரசித்தப் படுத்தியவர் மகாவீரர். தொடங்கிய காலம் தெரியவில்லை. கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த இவருக்கு முன்பாகவும் சமணப் பெரியார்கள் பலர் இருந்திருக்கின்றார்கள். இதன் சமய நூல் ஆகமம். இது அகிம்சை, வாய்மை, கள்ளாமை, துறவு, அவாவறுத்தல் என்ற (பிற்காலத்தில் திருவள்ளுவரால் கூறப்பட்ட) போதனைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

யூத மதம்: 

இதைத் தொடங்கியவர் என்று ஒருவர் இல்லை. 3000 வருடத்தற்கு முன்பிருந்தே இம்மதம் இருந்திருக்கின்றது. இதை அடிப்படையாய் வைத்துத்தான், கிறீஸ்தவ, இஸ்லாமிய, பஹாய் மதங்கள் தோன்றின. முன்பு சொல்லப்பட்ட தீர்க்க தரிசி இன்னமும் வரவில்லை; இனித்தான் வருவார் என்று யூதர்கள் கூற, இல்லை, இல்லை அவர் ஏற்கனவே வந்து விட்டார்; அவர்தான் இயேசு என்று கிறீஸ்தவர்கள் கூறுகின்றார்கள். இஸ்லாமியர்களோ இனி ஒருவரும் வருவதற்கில்லை, கடைசித் தீர்க்க தரிசி நபிகள் வந்து விட்டார் என்று முடிக்கின்றார்கள். யூதர்கள், இனி வரும் இரட்சகரை எதிபார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றாகள்.

அவ்வளவுதான், மதங்களைப் பற்றி ஏதோ சுருங்கச் சொல்லி ஒரு சின்ன விளக்கம் கிடைக்கட்டுமே என்று நினைத்து எழுதினேன்...!!!

--
யாழறிவன் தமிழ்

#Credit : https://www.facebook.com/photo.php?fbid=545018618978243&set=a.177791089034333.60111.100004103298250&type=3

Sunday, 12 June 2016

சுயத்தை இழந்த இந்தியம்.
மொஹமத் கஜினி இந்தியாவின் மீது தொடர்ந்து 18 முறை படை எடுத்தான் என்பதை நாம் பெருமையாக வரலாற்று நூல்களில் படிக்கிறோம். போஜ தேவர் என்கிற மன்னர் மொஹமத் கஜினியை தொடர்ந்து 17 முறை தோற்கடித்தார். அதை பற்றி நாம் யாருமே பேசுவது இல்லை.

ஜெப்பான் சாமுராய் வீரர்களை பற்றி நாம் மிக பெருமையாக பேசுகிறோம். ஆனால்? ஜெப்பான் சாமுராய் வீரர்களின் முன்னோடிகளாக இருந்தது ராஜேந்திர சோழனின் வாள் முதுகு படை.

ஆம். ராஜேந்திர சோழனின் படை மலேசியா, சிங்கப்பூர், ஜெப்பான் வரை ஆதிக்கம் செலுத்தியது. ராஜேந்திர சோழனும், அலெக்சாண்டரை விட மிகப்பெரிய நிலபரப்பை ஆண்ட செங்கிச்கானும் சம காலத்தவர்கள். ராஜேந்திர சோழன், செங்கிஸ்கான் இருவரும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டிருந்தால் வரலாறே மாறி போய் இருக்கும். செங்கிஸ்கான் வசம் இருந்த ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ராஜேந்திர சோழனின் காலடிக்கு வந்து இருக்கும்.

ராஜேந்திர சோழனின் படையில் இருந்த ராணுவ வீரர்கள் எவ்ளவு? பேர் தெரியுமா.

9 லக்ஷம் பேர். அன்றைய கால கட்டத்தில். அன்றைய மக்கள் தொகையில் எந்த மன்னரின் படையிலுமே இவ்வளவு ராணுவ வீரர்கள் இருந்ததில்லை.

Umayyad Caliphate என்கிற சாம்ராஜ்யம். செங்கிஸ்கானின் மங்கோல் சாம்ராஜ்யத்திற்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய நிலபரப்பை ஆண்ட சாம்ராஜ்யம். மொஹமத் நபி அவர்களின் மறைவுக்கு பின் உலகம் முழுவதும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவ ஆட்சிக்கு வந்த கலிபாக்களே இவர்கள்.

மொஹமத் நபி மறைவுக்கு பின் கலிபாக்களின் சாம்ராஜ்யம் என்பது உதயம் ஆகியது. Muawiyah என்கிற மன்னன் தான் Umayyad Caliphate சாம்ராஜ்யத்தை கிபி 661 இல் நிறுவியது.

ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், குவைத், ஈஜிப்த் முதலான நாடுகளில் ஆரம்பித்து. பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்த் முதல். அவ்ளவு ஏன்?

அமெரிக்கா, இங்கிலாந்தே அன்று முதல் இன்று வரை பார்த்து மிரளும் நாடு ரஷ்யா. உலக வீரர்களில் நம்பர் 1 என்று சொல்லப்படும் செங்கிச்கானே தொட பயந்த நாடு ரஷ்யா. அத்தகைய ரஷ்யாவையே தொட்டு பார்த்தவர்கள் இந்த கலிபாக்கள். கலிபாக்களை ஒப்பிடும் பொழுது. முகல் சாம்ராஜ்யம் ஜிஜூபி. அன்றைய உலக மக்கள் தொகையில் 29 சதவீதம் கலிபாக்கள் வசம் இருந்தது. ஒரு கோடியே 50 லக்ஷம் கிலோ மீட்டர் நிலபரப்பை ஆண்ட சாம்ராஜ்யம் இந்த கலிபாக்களின் சாம்ராஜ்யம்.

கிபி 661 இல் துவங்கி. 29 சதவீத உலக மக்களை ஆண்ட இந்த கலிபா சாம்ராஜ்யத்தற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்த இந்திய மாமன்னர் யார்? தெரியுமா. கிபி 713 இல் இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் அவதாரம் செய்த மாமன்னர் பப்பா ராவல். 740 களில் அன்றைய கலிபா மன்னன் Muhammad Bin Quasm ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி முதலான நாடுகளையே மண்டியிட வைத்த திமிரில் இந்தியாவின் மீது படை எடுத்து வந்தான்.

தாஹிர் சிங் என்கிற ஒரு மன்னரை முதலில் வென்றான். இந்தியாவில் அவன் பெற்ற முதல் வெற்றி அது. அதன் பின் அவன் ராஜஸ்தான் மீது படை எடுத்து வந்தான். ஒரு லக்ஷதிற்கும் மேற்பட்ட கலிபா படையை 40 ஆயிரம் வீரர்களை மட்டுமே கொண்ட பப்பா ராவலின் படை மிக எளிதாக வெற்றி கொண்டது. பின்னர் பப்பா ராவல் அவர்கள் அரேபிய மன்னர்களுக்கு தொடர்ந்து அடிமேல் அடி கொடுக்க ஆரம்பித்தார்.

அவரோடு அன்று தென் இந்தியாவில் மிகப்பெரிய சக்ரவர்த்தியாக இருந்த புலகேசி. [ புலிகேசி கிடையாது] விக்ரமாதித்யா2 முதலான மற்ற இந்திய மன்னர்களும் கை கோர்த்தனர். பப்பா ராவல் என்கிற ஒருவர் அன்று இல்லாமல் இருந்து இருந்தால். எட்டாம் நூற்றாண்டிலேயே அரேபியர்கள் இந்தியாவின் பெரும் பகுதியை கைப்பற்றி இருப்பார்கள். தீவிர சிவபக்தரான பப்பா ராவல். ஹரித தேவ் என்கிற மிகப்பெரிய யோகியின் சீடர். சிவனின் நேரடி தரிசனத்தை பப்பா ராவல் அவர்கள் பெற்றார் என்று இவரின் வரலாறு சொல்கிறது.

எட்டாம் நூற்றாண்டில் பப்பா ராவல் அவர்கள் ஈசனுக்கு மார்பிளால் மிக பிருமாண்டமான ஏக லிங்கேச்வர் கற் கோவிலை உதைபூரில் எழுப்பினார். அதே போல் விஷ்ணுவிற்கு. உதைபூரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாக்தாவில் சஹஸ்த்ர பாஹு என்கிற கோவிலை கட்டினார். ராஜஸ்தானில் மேவாட் என்கிற புதிய சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த மன்னரும் இவரே. சூரிய தேவன் தான் மேவாட் சாம்ராஜ்யத்தின் சின்னம்.

97 வயது வரை பப்பா ராவல் அவர்கள் வாழ்ந்தார். காரணம் இன்றி நாடு பிடிக்கும் ஆசையில் பப்பா ராவல் எந்த சமஸ்தானத்தின் மீதும் படை எடுத்ததில்லை. அதே சமயத்தில் தனது சாம்ராஜ்யத்தின் மீதோ. அல்லது உமையாத் போல் அந்நியர்கள் இந்தியாவில் எந்த சாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்தாலும் பப்பா ராவல் அந்த அந்நியர்களை நிர்மூலம் ஆக்காமல் விட மாட்டார்.

பப்பா ராவல் காலத்துக்கு பின். தொடர்ந்து 500 ஆண்டுகள் அரேபிய மன்னர்களால் இந்தியாவில் காலே வைக்க முடியவில்லை. இத்தகைய வீரம் மிகுந்த இந்தியாவை பின்னர் முகமத் கோரி என்கிற ஒரு அடிமை வென்று. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அவன் Qutub Minar என்னும் வெற்றி சின்னத்தையும் இன்றைய இந்திய தலைநகர் டெல்லியில் கட்டி விட்டு போய் விட்டான். இந்த கேவலம் எதனால்? நடந்தது. அலெக்சாண்டர் பாபிலோனில் இறந்த பின்.

அவன் தளபதி செலூசியஸ் நிக்கேடர் இந்தியா மீது படை எடுத்து வந்தான். அலெக்சாண்டரின் அந்த படையையே. சந்திர குப்த மௌரியா படை வென்றது. Umayyad Caliphate படையையே பப்பா ராவலின் படை வென்றது. ஜெப்பான் வரை ராஜேந்திர சோழனின் கோல் ஆதிக்கம் செலுத்தியது. மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற பல மாவீரர்களும், பல விஞ்ஞானிகளும் அதிகமாக வாழ்ந்த ஒரே தேசம் உலகினில் இந்திய தேசம் மட்டுமே.

அத்தகைய இந்த இந்திய தேசத்தை பல அந்நியர்கள் அடிமைபடுத்தி ஆண்டதற்கு ஒரே காரணம். நாம் நமது சுயத்தை இழந்ததால் மட்டுமே. இந்தியர்களுக்கு Physical Fitness கிடையாது என்று யாராவது என்னிடம் சொல்லும் பொழுது அவ்வாறு சொல்பவனின் காது ஜவ்வில் ஓங்கி அரைய வேண்டும் போல் எனக்கு தோன்றும். மனதளவில் பலவீனம் அடைந்த இதுபோன்ற பல கோடி கோழை இந்தியர்கள் இந்த மண்ணில் வாழ்வதால் தான் நமது தேசம் உருப்படமால் இருக்கிறது. சொந்த வரலாற்றை இழந்த ஒரு தேசம் எவ்வாறு? புதிய வரலாறை படைக்க முடியும்.

#Credit : https://www.facebook.com/groups/siddhar.science/permalink/1184706261579786/

Friday, 20 May 2016

படிக்காத மேதைகாமராஜர் ஒரு முறை ஒரு கலெக்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது...
ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...
பிறகு கலெக்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைடுல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைடுலே எப்படி சிந்திப்பீங்க..??.."­
கலெக்டர் தலை குனிந்தார்... படிக்காத மேதை...

Wednesday, 10 February 2016

ஆமை சொல்லும் இரகசியம்

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்
போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய
தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்
ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்
மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.
போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!
கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்
தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்
கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட
வழித்தடமும் ஒன்றுதான்!
ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்
ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்
தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.
விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்
உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.
தமிழ்கத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. இதில்
பல ரகசியங்கள் இருக்கும் போல!


# https://www.facebook.com/PanapattiraOnanti/photos/a.383495641758918.1073741828.383491878425961/829085103866634/?type=3&theater

இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வழிகள்.

இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன ? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் ?முன்னுரை :
தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் " தமிழ் மொழி " தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான். செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்புகளையும் அவை எவ்வாறு குறைந்தது என்பதையும் காண்போம்.
குமரிக்கண்டம் :
குமரிக்கண்டத்தில் தான் உலகின் முதல் மாந்தன் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு தான் தமிழ் மொழியும் பிறந்துள்ளது. இன்று தனி நாடுகளாக இருக்கும் ஆஸ்திரேலியா , தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் பல தீவுகள் எல்லாம் சேர்ந்து பிரம்மாண்டமாக இருந்த இந்த குமரிக்கண்டம் , இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருகிறது. தமிழின் முதல் சங்கம் குமரிக்கண்டத்தில் இருந்த " தென் மதுரையில்" தோன்றியதாக பல நூல்கள் குறிப்பிடுகிறது . அத்தகைய சிறப்பு வாய்ந்தது நம் தமிழ் மொழி.
தமிழ் மொழியின் சிறப்பு :
எந்த மொழியிலும் இல்லாத வகையில் , சிலபத்திகாரம், மணிமேகலை , சிவகசிந்தமணி ,வளையாபதி, குண்டலகேசி போன்ற இல்லகியங்கள் இருப்பது தமிழ் மொழியில் மட்டும் தான். அதுமட்டுமில்லாமல் கலைகளை இயல்,இசை, நாடகம் என்றும், எழுத்துக்களை உயிர், மெய், உயிர்மெய் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது தமிழில் மட்டும் தான். மேலும் இலக்கியத்தை அகம் , புறம் என்றும், நிலங்களை குறுஞ்சி, முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது இம்மொழியின் சிறப்பு. மேலும் திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைவருக்கும் , அனைத்துக் காலக்கட்டங்களிலும் பொருந்தும்வகையில் எழுதப்பட்டுள்ளது . தமிழ் மொழி தமிழ்நாட்டில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி சிங்கப்பூர், இலங்கை அகிய நாடுகளிலும் பேசப்படுகிறது.
தமிழின் பெயர்கள் :
தமிழை புலவர்கள், அமுதத் தமிழ் , இன்பத் தமிழ் , கனித் தமிழ் , தேன்தமிழ், பைந்தமிழ் , முத்தமிழ் , சங்கத்தமிழ் , செந்தமிழ் இப்படி சொல்லிக்கொண்டே போகும் வகையில் போற்றி இருக்கின்றனர்.
தமிழின் முக்கியத்துவம் குறைந்ததற்கு யார் காரணம் ?
இத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியின் முக்கியத்துவம், இன்றைய தமிழர்களின் வாழ்வில் குறைந்துள்ளதாகவே கருதுகிறோம். தமிழின் முக்கியத்துவம் குறைந்ததற்கு காரணம் யாரென்று ஆராய்ந்துப் பார்த்தல் , வேதனையாகவே உள்ளது. ஆம் , தமிழின் முக்கியத்துவம் குறைந்ததற்கு முழு காரணம் , நம் தமிழர்களே ஆவர். வேற்று மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமின்றி, ஆங்கிலம் போன்று பிற மொழிகள் பேசினால் தான் அறிவாளிகள் என்ற தவறான புரிதலே இதற்க்கு காரணம் . மொழியின் முக்கியத்துவம் குறைந்திருக்கும் போது , கண்டிப்பாக அம்மொழியின் வாயிலாக நாம் கற்ற கலை, இலக்கியம், கலாச்சாரம் அதனிலும் மாற்றம் ஏற்படுத்தியிருப்பதகவே தெரிகிறது.
தவறான புரிதல் :
ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பு என்றும் , ஆங்கிலம் கற்றவர்களே அறிவாளிகள் எனவும் பலர் தவறாக நினைத்துக்கொண்டிருப்பதே இதற்கு காரணம் . வெளிநாட்டில் , திடிரென்று தாய்மொழியை கேட்க்கும் பொது வரும் அளவற்ற மகிழ்ச்சி ஏன் நம்மூரில் தாய் மொழியில் பேசும் பொது வருவதில்லை? இதற்கு பெயர் தான் போலித்தனம் . எங்கோ ஒரு நாட்டில் நாம் தாய் மொழியைக் கேட்க்கும்பொழுது , உண்மையான சந்தோஷம் நம்மையும் மீறி வெளிப்பட்டு , போலித்தனம உடைந்துவிடுகிறது.
மேற்க்கத்திய மோகம்:
தமிழர்கள் பெரும்பாலானோர் மேற்க்கத்திய உடைகள் உடுத்துவது , அவர்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றுவது , மேற்க்கத்திய சிகை அலங்காரங்கள் செய்வது ,அவர்களின் மொழியை திறம்பட பேசுவது போன்ற செயல்களை எல்லாம் சிறப்பாக செய்கின்றனர். ஏன் ? நம் நாட்டு உணவு பழக்க வழக்கங்கள் கூட இப்போது மாறிவிட்டது. யாரும் இதையெல்லாம் வேண்டாம் என்று கூறவில்லை , ஆனால் மேற்க்கத்திய நாடுகளை விட , நம் சொந்த மண்ணில் உள்ள பழமை வாய்ந்த ஆடல் , பாடல் போன்ற கலைகளை பின்பற்றுவது , அறிய பல இடங்களை அறிவது , பலவகையான சுவையான பலகாரங்களை செய்வது , வீரவிளையாட்டுக்கள் போன்றவற்றை பின்பற்றினால் தமிழின் சிறப்பு இன்னும் பல ஆண்டுகள் வேறு பல நாடுகள் போற்றும்படியும் இருக்கும். மேலும் வெளிநாட்டு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை இப்படி வெளிநாட்டு நிறுவங்களுக்கு எந்த விளம்பர செலவுமின்றி தமிழர்களே " புதுமை “ என்னும் பெயரில் விளம்பரபடுத்திவிடுகின்றனர் . இது வெளிநாட்டு நிறுவங்களுக்கு நல்ல ஒரு லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது .
மொழியை கற்பதில் ஆர்வமின்மை :
இன்றைய தமிழர்கள் தாய்மொழியை கற்பதில் ஆர்வமின்றி இருக்கின்றனர். பெரும்பாலானோர் தமிழில் நன்றாக பேசினாலும் கூட , தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிவதில்லை. ஆங்கிலம் பேசதெரியவில்லை என்றாலோ, அல்லது ஆங்கிலத்தில் தவறாக பேசினாலோ வெட்க்கப்படுபவர்கள், தாய் மொழியாம் தமிழ் மொழியை எழுத படிக்க தெரியவில்லை என்று துளி கூட வெட்க்கப்படுவதில்லை. இனி நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை எப்படி இனிவரும் தலைமுறையினரிடையே கொண்டுசேர்ப்பது என்பதை காண்போம்.
சிறுவயது முதலே மொழியை கற்றல் :
ஒரு மொழியின் மீது திடிரென்று ஈர்ப்பு வந்துவிடாது. சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பெற்றோர் தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்திட வேண்டும். தமிழில் உள்ள நல்ல கதைகளையும், புத்தகங்களையும் வாங்கி கொடுக்க வேண்டும். தமிழில் உள்ள அறிஞர்களையும், தமிழ் இல்லகியங்களையும் எடுத்துரைக்க வேண்டும். தமிழில் உள்ள பழமை வாய்ந்த கோயில்கள் பற்றியும் , கட்டிட கலைகள் பற்றியும் , சிற்பக்கலைகள் பற்றியும் அவற்றின் சிறப்புக்களையும் எடுத்துரைக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பல பள்ளிகளில் தமிழில் பேசுவது வழக்கில் இல்லை. பெற்றோர்களும் குழந்தைகள் ஆங்கிலம் போன்று பிற மொழிகள் கற்பதையே ஊக்குவிக்கின்றனர். இதனை பெருமையாகவும் கருதுகின்றனர். இதற்காக குழந்தைகளை பல பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்புகின்றனர் . யாரும் பிறமொழிகளை கற்க வேண்டாம் என்று கூறவில்லை . ஆனால் அதே ஆர்வத்தோடு தமிழிலில் உள்ள பெருமைகளையும் அறியச் செய்யவேண்டும். பிற மொழிகள் கற்றபோதிலும் , தாய் மொழியின் சிறப்பை குழந்தைகள் அறிய செய்ய வேண்டும்.
தாய்மொழியில் சிந்திப்பதின் அவசியம்:
" சிந்திப்பது " மொழின் வழியாகத் தான் உள்ளது . மொழி இன்றி யாராலும் சிந்திக்க முடியாது. சிந்திப்பதற்கு மொழியே கருவியாக உள்ளது . அதேபோல் தான் பேச்சுத்திறன், ஒருவர் தான் சிந்தித்ததை , பிறருக்கு கூறுவது " பேச்சின் " வாயிலாக தான். அப்பேச்சு வெளிப்படுவது மொழியின் வாயிலாக தான். ஒரு குழந்தை , தாய் மொழியை தானாகவே கற்கிறது. தாய்மொழி அவ்வளவு எளிதாக ஒருவரது மனதில் பதிகிறது. தாய்மொழியில் சிந்திப்பதனால் கண்டிப்பாக ஒருவரது சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். சில கருத்துக்களை தாய் மொழியின் மூலமாகவே மிக வலுவாக கூறிடவும் மற்றவர் மனதில் பதியவைக்கவும் முடியும். அவ்வளவு வலிமை தாய்மொழிக்கு உண்டு. சிந்தனை , பேச்சு மட்டுமின்றி , தமிழ்மொழி சமூக அடையாளமாகவும் விளங்குகிறது.
புதிய எழுத்தாளர்களை கண்டறிதல் :
" தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை -தொடர்ச்சியில் உள்ளது."
தமிழில் புதிய எழுத்தாளர்களை கண்டறிதல் வேண்டும். அவர்களை தொடர்ந்து ஊக்குவித்தும், எழுதுவதற்கு ஒரு வழிமுறை அமைத்துக்கொடுத்தலும் அவசியம். இளம் எழுத்தாளர்கள் பலரை கண்டறிந்து, அவர்களின் கருத்துக்களை கேட்கலாம். கவியரங்கம், கருத்தரங்கம் போன்று நிகழ்ச்சிகளை ஒருங்கினைத்து புதிய சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ளலாம். தமிழை பாடமாக கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமின்றி , வேறுதுறைகளில் இருந்து சிறப்பாக எழுதும் எழுத்தாளர்களை கண்டறிந்து, அவர்களை பாராட்டவும் செய்யலாம். தொடர்ந்து எழுதுவதற்கு வழிவகைகள் செய்யலாம்.
தமிழில் பெயர் சூட்டுதல் :
மொழிதான் ஒருவரின் அடையாளம் ஆகும். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் வார்த்தைகளில் பெயர் சூட்டலாம். குழந்தைகளுக்கு மட்டுமின்றி தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ,திரைப்படங்கள் போன்றவற்றிற்கும் தமிழில் பெயர் சூட்டலாம். பள்ளிகளில் தமிழ் சொல் விளையாட்டுகள் நடத்துதல் , அலுவலகம் தவிர்த்து மற்ற இடங்களில் தமிழிலே உரையாடுதல், புத்தகங்களை பரிசளித்தல், தொலைக்காட்சிகளில் தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்துதல் , அழகாக தமிழில் கையெழுத்திட்டு பழகுதல், இவ்வாறு சிலவற்றை கடைப்பிடித்தல் சுலபமாக தமிழின் பெருமையை காக்கவும், தொடரவும் உதவும்.
தொழில்நுட்பக்கல்லுரிகளில் தமிழின் அவசியம்:
அறிவியல் , வேதியியல் , இயற்பியல் , உயிரியல், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழை பயன்பாட்டு மொழியாகவும் கொண்டுவரலாம். இத்துறைகளில் பயன்படுத்தும் தமிழ் சொற்களை மாணவர்கள் அறிய செய்யவேண்டும். படிக்கும் துறை தான் தொழில் நுட்பம், தாய் மொழி தமிழ் மொழி என்பதை மறந்துவிடக் கூடாது . துறை எதுவானாலும் சரி, கல்லூரிகளில் தமிழின் அவசியத்தை உணர்த்திட முன் வரவேண்டும். கல்லூரிகளில் தமிழில் கவிதைப் போட்டி , கட்டுரைப் போட்டி , சொல் விளையாட்டு, போன்று போட்டிகள் நடத்திடல் வேண்டும். பள்ளியோடு முடிந்துவிடாமல் கல்லூரிகளிலும் தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும் . இன்றைய மாணவர்கள் ஆங்கிலத்தை எப்படி கற்க்கிறார்களோ , அதுபோல் தமிழின் சிறப்புக்களையும் , பெருமைகளையும் உணர்ந்திடல் வேண்டும்.
அலுவகங்களில் தமிழின் அவசியம்:
அலுவகங்களில் நேரம் கிடைக்கும் பொழுது , தமிழ் விளையாட்டுகள் நடத்த வேண்டும். அலுவகங்களில் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் அனைவரும், ஆங்கிலம் அலுவகத்தில் மட்டும் பேசும் மொழி எனவும் , தமிழ் தான் தன் தாய்மொழி என்று சிந்திக்க வேண்டும். நாம் எப்படி பிற மொழிகளை கற்றறிந்தோமோ , அதே போல் பிற மொழி பேசுபவரோடு , தமிழின் பெருமையும் பகிரலாம் .
தொழில்நுட்ப வல்லுனர்களின் பங்கு அவசியம் :
தொழில்நுட்பத்தில் பணியாற்றும் பொறியாளர்கள் பலருக்கு, தமிழின் ஆழம் பற்றி தெரியாது. அனால் தமிழின் ஆழமான பெருமையை கொண்டுசேர்ப்பதில் கைத்தேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமிழின் பெருமையை நாம் கொண்டுசேர்த்தோமானால் , தமிழின் பெருமையை கண்டிப்பாக வேறுக்கட்டத்திற்கு அவர்கள் கொண்டுசேர்ப்பார்கள்.
பெயர் பலகைகள்:
நம் ஊரில் உள்ள பல பெயர் பலகைகளில் , பெயர்கள் ஆங்கிலத்தில் பெரியதாகவும், தமிழில் மிக சிறியதாகவும் எழுதப்பட்டுள்ளது. நம் மொழின் பெருமையை ஒவ்வொருவரும் அறிந்திட வேண்டும். அப்படி அறிந்திருப்பாராயின் , கண்டிப்பாக அவரவர்களே தங்கள் கடை முன் இருக்கும் பெயர் பலகைகளில் , தமிழை பெரிதாகவும், ஆங்கில எழுத்தை சிறியதாகவும் மாற்றி அமைத்திட வேண்டும். ஒரு ஊரின் உள்ளே வேற்று மாநிலத்தவர் வரும் பொழுது, அவர்களே அவ்வூரின் மொழியினையும் , அம் மொழியின் சிறிப்பினையும் அறிந்து ஆச்சிரியப்படும் அளவிற்கு இருக்க வேண்டும்.
வாசித்தல் பழக்கம் :
இன்னும் பத்திரிகைகளில் மாணவர்களை கவரும் வகையில், தமிழ் சமந்தப்பட விளையாடுக்கள் மற்றும் பல தமிழ் தொடர்பான போட்டிகளை வைக்கலாம். தமிழின் தொன்மை பற்றியும் , தமிழின் சிறப்புக்கள் பற்றியும் எழுதலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு கோயில்கள் பற்றியும், அதன் கட்டிடக்கலை பற்றியும் தொடர்ச்சியாக எழுதலாம்.இது மாணவர்களை கவரும் வகையில்,அடுத்த வாரம் என்ன தகவல் தெரிந்துக்கொள்ள போகின்றோம் என்று ஆவலை ஏற்ப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தமிழில் உள்ள புலவர்கள் பற்றியும், நூல்கள் பற்றியும் மாணவர்கள் ஆர்வத்தோடு கற்கும் வகையில் எழுதலாம். ஒவ்வொரு வாரமும் அதிலிருந்து ஒரு கேள்வியும், அக்கேள்விக்கு சரியான விடை அளிக்கும் மாணவர்களுக்கு பரிசுக்களையும் வழங்கலாம்.இது அவர்களின் ஆர்வத்தை கண்டிப்பாக அதிகரிக்கும். இதனோடு அவர்களுக்கு கவிதை என்றால் என்ன என்பதையும், கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதையும் விளக்கிய பின்பு, அதிலும் ஒரு போட்டியை அறிவிக்கலாம் . இவ்வாறு பள்ளிகள் மட்டுமின்றி நாமும் அவர்களுக்கு தமிழை கற்க வழி செய்யலாம் .
எங்கே தேடுவேன் தமிழை எங்கே தேடுவேன் :
தாய்மொழியாம் தமிழ்மொழியை எங்கும் தேட வேண்டாம் . பயிற்சி வகுப்புகளுக்கும் செல்ல வேண்டாம் . ஆராய்ச்சி ஏதும் செய்திட வேண்டாம். செந்தமிழினில் கூட பேச வேண்டாம் , நமக்கு தெரிந்த தமிழில் , அழகாக பேசினால் போதும். தமிழின் சிறப்பு பற்றி அறிந்தவர்கள் , அடுத்தவர்களுக்கு அழகாக எடுத்துரைத்தால் போதும். தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தினமும் நீண்ட தூரம் பயணம் செய்வோர் தமிழ் புத்தகங்களை கையில் எடுத்துச் செல்லலாம் . வீட்டில் பல நூல்களை சேகரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம் . தெரிந்தவர்களுக்கு புத்தகங்களை பரிசளிக்கலாம். சிறுவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றதுப்போல் சிறுகதை புத்தகங்களை பரிசளிக்கலாம் . தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்க வேண்டும். தமிழில் கையெழுத்திட்டு பழகலாம்.சிறுவர்களுக்கு தமிழில் உள்ள விடுகதைகள் , பழமொழிகள் , அதில் உள்ள அர்த்தம் ஆகியவற்றை எடுத்துக்கூறலாம் .
நூல்களை மொழிபெயர்க்க வேண்டும்:
தமிழில் உள்ள பெருமையை மற்ற நாடுகளுக்கு கொண்டுசேர்த்ததன் பங்கு வெளிநாட்டவருக்கும் உண்டு . அதே போல் தமிழில் உள்ள நூல்களை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். திருக்குறளை முதலில் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். இதே போல் தமிழில் உள்ள சிலப்பதிகாரம் போன்ற நூல்களை மற்ற நாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் , சங்க இலக்கியங்களை மொழிபெயர்த்து , உலக மக்கள் வியக்கும் படி தமிழை கொண்டுசெல்லவேண்டும். அம்மொழிகளில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் திறம்பட இதனை செய்திடல் வேண்டும்.
நூல்களை கணினி மயமாக்குதல் :
திருக்குறள் , சிலபத்திகாரம் , கம்பராமாயணம் போன்ற தமிழில் உள்ள நூல்களை , மொழிபெயர்ப்பதுடன், கணினி மயமாக்குதல் அவசியம் . இதன் மூலம் உலக மக்கள் அனைவரும், இந்நூல்களை எளிய முறையில் படிக்க வழி செய்ய வேண்டும்.
இலக்கியத்தின் வாயிலாக தமிழை கற்றிடல் அவசியம் :
தமிழை இன்னுமும் ஆழமாக , அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி வளர்த்திட வேண்டும். இது தமிழர் ஆகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்திட வேண்டும். இல்லகியங்களின் வாயிலாக தமிழ் மொழியை கற்ப்பிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு தேவையான அனைத்து கருத்துக்களும், நெறிகளும் சங்க இல்லகியத்தில் உள்ளது என்பதை அவர்கள் அறிய செய்யவேண்டும்.
தமிழ் ஒரு பிரம்மாண்டம் :
தமிழ் என்று சொல்லும்போதே அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கிறது. ஆம், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களில் , இந்தியாவிலிருந்து இடம்பிடித்த ஒரே இடம் , நம் " தமிழ்நாடு " தான் என்பதில் பெருமிதம் கொள்வோம் . தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் , தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும் மற்றும் இங்குள்ள சிறந்த கட்டிடகலைகளும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்வியல் மொழியாக தமிழ் மாறிடல் வேண்டும் :
தமிழ் எழுத , படிக்க மட்டுமில்லாமல் , வாழ்வியல் மொழியாக மாறவேண்டும். அதாவது , தமிழர்களின் கல்வி , மருத்துவம், கலை, தொழில்நுட்பம் , கணிதம், வங்கி, ஊடகங்கள் என அனைத்தும் தமிழில் செயல்ப்படவேண்டும். இவ்வாறு கொண்டுவருவதன் மூலமே தமிழ் மேலும் செழித்து வளரும். ஆராய்ச்சிகளும் தமிழில் மேற்கொள்ளபட வேண்டும் . கண்டிப்பாக இவ்வாறு தமிழை வாழ்வியல் மொழியாக ஆக்குவதன் மூலம் , நம் தமிழை அடுத்த ஒரு கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
முடிவுரை:
கலை, இல்லகியம், கலாச்சாரம் , அறிவியல், மருத்துவம் போன்ற அனைத்தையும் கற்றுக்கொடுத்த இத்தகு சிறப்பு வாய்ந்த தாய்மொழியாம் , தமிழ் மொழியின் பெருமையை தொடரச் செய்வது நம் ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ள கடமையாகும். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." என்றும் , " தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் " என்றும் பாரதியார் கூறியது போல, அவரது கனவை நினைவாக்கும் விதத்தில் , தமிழை இவ்வுலகமெல்லாம் பரவ செய்தல் வேண்டும். மேலும் தமிழின் மேன்மை , அதன் தொன்மையில் இல்லை ,தொடர்ச்சியில் உள்ளது என்பதை அனைவரும் மனதில்கொண்டு செயல்பட வேண்டும். தமிழ், தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் போன்று அனைத்துறைகளிலும் நாம் பதித்த முத்திரைகள் , ஒவ்வொரு தமிழனுக்கும் பூரிப்பையும், பெருமையையும் ஏற்ப்படுத்தும் . தமிழனுக்கு இவ்வளவு பெருமை சேர்த்த தமிழுக்கு, தமிழராகிய நாம் ஒவ்வொருவரும் இனி பெருமை சேர்ப்போம் . தமிழ்மொழி தான் தமிழனுக்கு முகவரி என்பதில் பெருமைகொள்வோம் . தமிழ் மொழியை நேசிப்போம் , தமிழ் மொழியையே சுவாசிக்கவும் செய்வோம் .தமிழை இனி தினம் தினம் கொண்டாடுவோம் . "தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா.......”
வாழ்க தமிழ் , வளர்க தமிழ் !!!
நன்றி - பமீலா சந்திரன்.

# https://www.facebook.com/TacticTamilnadu/posts/1232416273439887:0