Tuesday, 26 July 2016

அப்துல் கலாம் - ஒரு சகாப்தம்இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேஷ் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா. இந்தியாவை மிரட்டும் நடவடிக்கையாக இந்தியாவை நோக்கி தனது போர்க்கப்பல்களை அனுப்பியது.

ஆனால் அவை வந்து சேருவதற்குள்ளாக இந்தியப் படைகள் பாகிஸ்தான் படைகளை சரணடையச் செய்தன. போரே முடிந்து விட்டது. மூக்கறுபட்டது போல அமெரிக்கப் போர்க் கப்பல்கள் வந்த வழியே திரும்பிச் சென்றன.

அக்கால கட்டத்தில் இந்தியாவிடம் அணுகுண்டுகள் கிடையாது. அவற்றைச் சுமந்து செல்வதற்கான ஏவுகணைகள் கிடையாது. அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க இந்தியாவிடம் செயற்கைக்கோள்கள் கிடையாது. செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கான ராக்கெட்டும் கிடையாது.

அன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் இந்தியாவிடம் இப்போது அணுகுண்டுகளை சுமந்தபடி 8000 கிலோ மீட்டர் பறந்து சென்று எதிரி இலக்குகளை தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளன. அவற்றை இலக்கு தவறாமல் தாக்குவதற்கு உதவும் ஜிபிஎஸ் வகை செயற்கைக்கோள்கள் உள்ளன.

எதிரிப் படைகளின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிரியின் படைத் தளங்களை துல்லியமாகப் படம் பிடிக்கின்ற செயற்கைக்கோள்களும் உள்ளன.

இன்று நம்மை எதிரி மிரட்டினால் பதிலுக்கு நாமும் மிரட்ட முடியும். இதையெல்லாம் சாத்தியமாக்கியதில் அப்துல் கலாமுக்குப் பெரும் பங்குண்டு

அப்துல் கலாம் பட்டப் படிப்பையும் பட்ட மேல் படிப்பையும் முடித்துக் கொண்டு சில காலம் ராணுவத் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் 1963 ஆம் ஆண்டில் ராக்கெட் எஞ்சினியராக கேரளத்தில் தும்பா என்னுமிடத்தில் அப்போது தான் அமைக்கப்பட்ட சிறிய ஆராய்ச்சி ராக்கெட் கேந்திரத்தில் சேர்ந்தார்.

தும்பாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் தென்னை மர உயரம் கூட இல்லாதவை. வானில் 30 முதல் 180 கிலோ மீட்டர் உயரத்தில் காற்று மண்டல நிலைமை, வான் இயற்பியல் நிலைமைகள் முதலியவற்றை ஆராயும் பொருட்டு ஐ. நா. ஆதரவில் இந்த கேந்திரம் நிறுவப்பட்டது.

தும்பாவில் செயல்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் நிலையம் அமெரிக்காவிலிருந்தும் பிரான்சிலிருந்தும் ராக்கெட் செலுத்து சாதனங்கள், அமெரிக்க, பிரெஞ்சு ராடார்கள், பிரெஞ்சு காமிராக்கள், ரஷிய கம்ப்யூட்டர்கள் முதலியவை இங்கு வந்து சேர்ந்தன. அந்த நாடுகள் கொண்டு வந்த சிறிய ராக்கெட்டுகள் தான் இங்கிருந்து செலுத்தப்பட்டன..

பின்னர் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் இங்கிருந்து செலுத்தப்பட்டன. இது அப்துல் கலாமுக்கு சிறந்த அனுபவத்தை அளித்தது. அவர் இங்கு பணியாற்றிய போது புதிய தொழில் நுட்பங்களையும் உருவாக்கினார்.

பூமியின் காந்த நடுக்கோட்டுக்கு அருகில் தும்பா அமைந்துள்ள காரணத்தால் இங்கு இவ்வித ராக்கெட் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு பணியாற்றிய அப்துல் கலாமும் அவரைப் போன்றவர்களும் ஒரு நாளில் 18 மணி நேரம் கூட வேலை செய்ததுண்டு. குறிப்பாக அப்துல் கலாமின் பணி அப்போதைய விண்வெளித் துறையின் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாயை மிகவும் கவர்ந்தது.

இதற்கிடையே 1969 ஆம் ஆண்டில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி அமைப்பு நிறுவப்பட்டது. நடுவில் வேறு சில திட்டங்களில் பணியாற்றிய அப்துல் கலாம் இஸ்ரோவுக்கு மாற்றப்பட்டார். விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கான ராக்கெட்டை உருவாக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான வகையில் 1971 ஆம் ஆண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் நிறுவப்பட்டது.

ஆரம்பத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சிறிய ஆராய்ச்சி ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டன. பின்னர் எஸ்.எல்.வி எனப்படும் பெரிய ராக்கெட்டை உருவாகும் பணி மேற்கொள்ளப்பட்டது. திட்ட டைரக்டர் என்ற முறையில் ராக்கெட் தயாரிப்பின் எல்லா பணிகளையும் அப்துல் கலாம் கவனிக்க வேண்டியிருந்தது. எஸ்.எல்.வி என்பது செயற்கைக்கோள் செலுத்து சாதனம் என்னும் பொருள் கொண்ட ஆங்கில சொற்றொடரின் சுருக்கமாகும்.

முதல் முயற்சியாக 1979 ஆம் ஆண்டு ஆகஸ்டில் எஸ்.எல்.வி ராக்கெட்டானது ரோகிணி என்னும் சிறிய செயற்கைகோளை சுமந்தபடி வானில் பாய்ந்த சில வினாடிகளில் தோல்வியில் முடிந்தது. எதிர்பாராத பிரச்சினைகளால் இத்தோல்வி ஏற்பட்ட போதிலும் தோல்விக்கு அப்துல் கலாம் முழுப் பொறுப்பேற்றார். அவர் மனம் துவண்டு விடவில்லை.

1980 ஆம் ஆண்டு ஜூலையில் எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்து ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியது. அதன் மூலம் ராக்கெட் யுகத்தில் இந்தியா அடி எடுத்து வைத்தது.

இதற்குள்ளாக அப்துல் கலாம் ராக்கெட்டுக்கான திட எரிபொருள் துறையில் நிபுணர் என்று பெயர் பெற்றவரானார். அந்த முறையில் அவருக்கு அடுத்த பணி காத்திருந்தது. அதாவது நாட்டின் பாதுகாப்புக்கான ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது..ஏவுகணைகள் திட எரிபொருளைப் பயன்படுத்துபவை.

இங்கு செயற்கைக்கோளை செலுத்துகின்ற ராக்கெட்டுக்கும் ஏவுகணைக்குமான வித்தியாசத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டுமே ராக்கெட் தத்துவ அடிப்படையில் செயல்படுபவை.

ஆனால் நாம் பொதுவில் ராக்கெட் என்று வருணிக்கும் செயற்கைக்கோள் செலுத்து சாதனம் குறைந்தது 300 கிலோ மீட்டர் உயரத்துக்குச் சென்று ஒரு செயற்கைக்கோளை அசுர வேகத்தில் செலுத்தி பூமியைச் சுற்றும்படி செய்து விட்டால் அதன் பணி அத்துடன் முடிந்து விடுகிறது.

செயற்கைக்கோளை செலுத்தும் ராக்கெட்டில் வெவ்வேறு அடுக்குகளில் திட எரிபொருள் அல்லது திரவ எரிபொருளைப் பயன்படுத்தலாம்.

ஏவுகணையும் சரி, வானை நோக்கிப் பாய்வது தான். அதன் முகப்பில் குண்டு இருக்கும். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரி நிலைகளைத் தாக்குவதற்கான ஏவுகணை என்றால் முகப்பில் நிச்சயம் அணுகுண்டு இருக்கும்.

ஏவுகணையானது மிக உயரத்துக்குச் சென்று நீண்ட தூரம் பறந்த பிறகு எதிரி நிலையைத் தாக்க மறுபடி காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கியாக வேண்டும். அப்படி இறங்கும் போது அதன் முகப்பு கடுமையாகச் சூடேறும்.

அந்த வெப்பமானது முகப்பில் உள்ள அணுக்குண்டைப் பாதித்து விடாமல் பாதுகாப்பு இருக்க வேண்டும். எதிரி நிலையைத் தேடி அறிவதற்கான நுட்பமான கருவிகள் இருக்க வேண்டும். அந்த அளவில் ஏவுகணைகளை உருவாக்குவது சிக்கலான பணியாகும்.

இங்கு இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது ஒரு நாடு அணுகுண்டுகளைப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் சுமந்து செல்ல ஏவுகணைகள் இருக்க வேண்டும். அதே போல ஏவுகணைகள் மட்டும் இருந்தால் போதாது. அவற்றின் முகப்பில் வைத்துச் செலுத்த அணுகுண்டுகள் அவசியம்.

சீனா 1964 ஆம் ஆண்டில் அணுகுண்டுகளைப் பெற்று விட்ட நிலையில் இந்தியா இனியும் வாளாவிருக்கக் கூடாது என்ற நோக்கில் 1974 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியின் போது இந்தியா அணுகுண்டை உருவாக்கி நிலத்துக்கு அடியில் வெடித்து சோதனை நடத்தியது.

ராஜஸ்தான் பாலைவனத்தில் பொகாரன் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அணுசக்தி நிபுணர்களுடன் அப்துல் கலாமும் அங்கு இருந்தார்.

பின்னர் 1998 ஆம் ஆண்டில் இந்தியா நிலத்துக்கடியில் சக்திமிக்க பல அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்த போதும் பொகாரனில் அப்துல் கலாம் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் என்ற முறையில் அங்கு இருந்தார்.

இந்தியா முதல் தடவை அணுகுண்டு சோதனை நடத்திய போது ஏதோ அணுகுண்டு என்பது தங்களது ஏகபோக உரிமை என்று கருதிய வல்லரசு நாடுகள் இந்தியாவைக் கண்டித்தன. இந்தியா அணுகுண்டு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கூறின.

இந்தியாவுக்கு எதிராக அவை பல கட்டுமறுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தியாவுக்கு எந்த நாடும் அணுசக்தி துறையில் எந்த உதவியும் செய்யலாகாது என்று தடை விதிக்கப்பட்டது.

பொகாரனில் நடத்தப்பட்ட முதல் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் இந்தியா ஏவுகணைகளையும் தயாரித்தாக வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி இதற்கென நிறைய நிதி ஒதுக்கினார். அப்போது தான் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டம் அப்துல் கலாம் வசம் ஒப்ப்டைக்கப்பட்ட்து. அந்த சமயத்தில் ஆர். வெங்கட்ராமன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

பிருத்வி ஏவுகணை
சில நூறு கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்க வல்ல ஏவுகணை, நீண்ட தூரம் செல்ல வேண்டிய ஏவுகணை, போர்க்களத்தில் பயன்படுத்துவதற்கான சாதாரண ஏவுகணை என பல்வகை ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணிகள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெங்கட்ராமன் ஆலோசனை கூறினார்.

இந்தியா ஏவுகணைகளைத் தயாரித்து விடாமல் தடுக்க அப்போது அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய நாடுகள் பல வழிகளில் முயன்றன. ஏவுகணை தயாரிப்புக்கு உதவக்கூடிய எந்தப் பொருளும் இந்தியாவுக்குக் கிடைக்காதபடி அவை தடை விதித்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்கா எச்சரிக்கையும் விடுத்தது.

இந்த அத்தனை தடைகளையும் மீறித்தான் இந்தியா ஏவுகணைத் தயாரிப்பில் முன்னேற்றம் கண்டது. ஏவுகணைக்கான குறிப்பிட்ட வகை விசேஷ உருக்கை நாமே சொந்தமாகத் தயாரிப்பதில் வெற்றி கண்டோம் இப்படியாக பல தடைகளும் முறியடிக்கப்பட்டன. இதில் அப்துல் கலாமின் தலைமையிலான குழுவினர் பெரும் பங்களித்தனர்.

ஆரம்ப கட்ட பிரச்சினைகளுக்குப் பின்னர் அக்னி-1 ஏவுகணை, பிருத்வி ஏவுகணை ஆகியவை தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக வானில் செலுத்தப்பட்டன. இரண்டுமே அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடியவை.

அக்னி வரிசையில் பின்னர் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை 5000 முதல் 8000 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பறந்து சென்று தாக்க வல்லது. இந்த ஏவுகணை சீனாவின் வட எல்லை வரை செல்லக்கூடியது. பிருத்வி வரிசையிலும் பல்வேறு திறன் கொண்ட ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது.

அக்னி-5 ஏவுகணை
இவை தவிர, ஆகாஷ், திரிசூல், நாக் போன்ற சாதாரண ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரமிட்டவர் அப்துல் கலாமே. எனவே அவரை ஏவுகணை மனிதர் என்று வருணிப்பது உண்டு.

செயற்கைக்கோள்களை செலுத்த அப்துல் கலாம் உருவாக்கிய எஸ்.எல்.வி ராக்கெட்டின் திறன் பின்னர் மேலும் அதிகரிக்கப்பட்டு பி.எஸ்.எல்.வி ராக்கெட் உருவாக்கப்பட்ட்து. அப்துல் கலாம் ஏவுகணை பக்கம் திரும்பியதற்கு முன்னர் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை உருவாக்குவதற்கும் பங்களித்தார். இந்த ராக்கெட் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருகிறது.

இப்போது மேலும் அதிக திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான இந்த ராக்கெட்டுகள் அனைத்தும் ஆக்கப்பணிக்கானவை.

இவை வானிலைத் தகவல் சேகரிப்பு, மேப் தயாரித்தல், இந்தியாவின் இயற்கை வளங்களைக் கண்டறிதல் போன்ற பணிகளுக்கான செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகின்றன.

ஏவுகணைகளை உருவாக்க முக்கிய பங்களித்ததன் மூலம் அப்துல் கலாம் இந்தியாவை இனி எந்த நாடும் மிரட்டத் துணியாது என்ற நிலையை உண்டாக்கியுள்ளதாகக் கூறலாம்.

ஆனாலும் அவர் நமது நாட்டின் எதிரி வறுமையே என்று கருதியவர். அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டின் உண்மையான பலம் என்று கூறியவர். ஆயுதங்களை உருவாக்கியவர் அமைதியைத் தான் நேசித்தார். குடியரசுத் தலைவர் என்ற உயர்ந்த பதவியை வகித்த போதும் தமது எளிமை மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த மாமனிதராகத் திகழ்ந்தார்.

#Credit : https://www.facebook.com/photo.php?fbid=1730859437152786&set=a.1721014068137323.1073741828.100006862390323&type=3

பெருந்தலைவர் காமராஜ்ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14 இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...
என்று. தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

#Credit : http://eluthu.com/kavithai/97380.html

Wednesday, 13 July 2016

Friday, 8 July 2016

ஏறுதழுவுதல் - தமிழரின் வரலாறு

தமிழரின் வரலாறு என்ன என்று தெரிய வேண்டும்! தெரியாமல் பேச கூடாது Ban PETA!


ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது.

முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது. பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.

பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர்.

இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை,

'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு 
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை 
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் 
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
 வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
 நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) 

என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.

ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.

வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,

'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் 
முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) 

என்று குறிப்பிடும்.

கலித்தொகை
கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.

பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர்.

ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.

பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான்.

ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

எனவே நம் முன்னோர்கள் பல் உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.

'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் 
புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.103 63-64) 

என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.

கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம்.

காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬ ‪#‎ஆனையூர்ஜீவா‬

Credit :
https://www.facebook.com/jallikattua2z/posts/1242651602413610:0

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..!

Tuesday, 5 July 2016

தமிழருடைய பாரம்பரிய நெல் விதைகள் சேகரிப்பு தொழில்நுட்பம்!இதன் பெயர் கோட்டை, விதைகளை வைக்கோளால் கட்டி அடுத்த நாள் நாட்டுப்பசு சாணியால் மெழுகி வைத்துவிடுவர். 

ஒரு வருடத்திற்கு ஒன்றுமே ஆகாது. 

மேலும் திரும்ப முளைப்பதற்கான தட்ப வெட்பம் இதில் பேணப்படுகிறது. இன்றும் பல கிராமங்களில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழரின் தனித்துவமான அறிவியலை அனைவருக்கும் அறியப்படுத்துவோம். 

நன்றி - இராஜன் நெல்லை