Posts

ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்

Image
கி.பி.(700-720) 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. தமிழ் நாட்டின் முதல் கருவறைமேல் விமானம் தாங்கிய கோயில் பல்லவர்கள் குடவரைகோயில்கள் வடிவத்திலிருந்து மாறி புதியவடிவத்தை கண்டுபிடித்தனர், அதுதான் மணற்கற்கல்(sand stone). இந்த கோயில் முழுவதும் மணற்கற்களால் மட்டுமே கட்டப்பட்டதுள்ளது. இந்த கோயிலை பார்த்தப்பிறகுதான் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் நான்கு வகையான கல்வெட்டு எழுத்துகள் உள்ளன 1.நாகரி எழுத்து 2.கிரந்தம் எழுத்து 3.நன்குஅலங்கரிக்கப்பட்டகிரந்தம் எழுத்து 4.பூ வேலைப்பாடு கொண்ட கிரந்தம் எழுத்து பல்லவ மன்னன்ர்கள், சோழ மன்னன்ர்கள், விஜயநகர மன்னன்ர்கள், முகாலாய மன்னன்ர்கள் யாருமே இந்த கோயிலை சேதபடுத்தவில்லை. எங்கு பார்த்தாளும் பிரமிப்பு. வாழ்க்கையில் ஒருமுரையேனும் ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில் வந்துபாருங்கள். -அறம் கிருஷ்ணன் #Credit :  https://www.facebook.com/tamilnationality/

உலகில் மதங்கள்

Image
இந்து, கிறீஸ்தவ, பௌத்த, இஸ்லாமிய, சமண, யூத மதங்கள் உருவாகிய விதங்கள் பற்றி ஒரு சில வரிகளில் அறிவோம்... இந்து மதம்: இந்தியாவில் காலம் காலமாகப் பலவிதமான தெய்வங்களை, வேறு வேறு சமயப் பெயர்களுடன் வணங்கி வந்தவிடத்து, பிற்காலத்தில் இத்தெய்வங்களிடையே மாமன், மாமி, கணவன், மனைவி, அண்ணன், தங்கை எனப் பல உறவுமுறைகளை உருவாக்கி, அந்தப் பொதுவான அமைப்பினை இந்து மதம் என்று அழைக்கலாயினர். அச்சமயங்களில் முதன்மையாய் நின்றிருந்தது சைவ சமயமாகும். சைவ சமயத்தைச் ஸ்தாபித்தவர் என்று ஒருவரும் இலர். ஒரு 5, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்காலாம். கி.மு.2500-1500 ஆண்டு காலத்தில் இருந்த சிந்து வெளி நாகரிக காலத்திலேயே சிவலிங்க வழிபாட்டை ஒத்த வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன. கி.மு.1500-500 களில் வேதங்கள் எழுதப்பட்டன. பின்னர், கி.மு.500-கி.பி.500 களில்புராண இதிகாசங்கள் இயற்றப்பட்டன. கி.பி. 500-1500 புராணங்கள் பாடப்பட்டன. இச்சமயத்தை வளர்த்தவர்கள் ரிஷிகள், சமய குரவர்கள், ஆழ்வார்கள் என்று பலர் இருந்தனர். இறைவன் ஆதியும், அந்தமும் இல்லாதவர், உருவமோ, அருவமோ அற்றவர். எங்கும் நிறைந்தவர், எல்லாமாயே இருப்பவர...

சுயத்தை இழந்த இந்தியம்.

Image
மொஹமத் கஜினி இந்தியாவின் மீது தொடர்ந்து 18 முறை படை எடுத்தான் என்பதை நாம் பெருமையாக வரலாற்று நூல்களில் படிக்கிறோம். போஜ தேவர் என்கிற மன்னர் மொஹமத் கஜினியை தொடர்ந்து 17 முறை தோற்கடித்தார். அதை பற்றி நாம் யாருமே பேசுவது இல்லை. ஜெப்பான் சாமுராய் வீரர்களை பற்றி நாம் மிக பெருமையாக பேசுகிறோம். ஆனால்? ஜெப்பான் சாமுராய் வீரர்களின் முன்னோடிகளாக இருந்தது ராஜேந்திர சோழனின் வாள் முதுகு படை. ஆம். ராஜேந்திர சோழனின் படை மலேசியா, சிங்கப்பூர், ஜெப்பான் வரை ஆதிக்கம் செலுத்தியது. ராஜேந்திர சோழனும், அலெக்சாண்டரை விட மிகப்பெரிய நிலபரப்பை ஆண்ட செங்கிச்கானும் சம காலத்தவர்கள். ராஜேந்திர சோழன், செங்கிஸ்கான் இருவரும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டிருந்தால் வரலாறே மாறி போய் இருக்கும். செங்கிஸ்கான் வசம் இருந்த ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ராஜேந்திர சோழனின் காலடிக்கு வந்து இருக்கும். ராஜேந்திர சோழனின் படையில் இருந்த ராணுவ வீரர்கள் எவ்ளவு? பேர் தெரியுமா. 9 லக்ஷம் பேர். அன்றைய கால கட்டத்தில். அன்றைய மக்கள் தொகையில் எந்த மன்னரின் படையிலுமே இவ்வளவு ராணுவ வீரர்கள் இருந்ததில்லை. Umayyad Caliphate என்கிற சாம்ரா...

படிக்காத மேதை

Image
காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு கலெக்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைடுல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைடுலே எப்படி சிந்திப்பீங்க..??.."­ கலெக்டர் தலை குனிந்தார்... படிக்காத மேதை... Credit :  https://www.facebook.com/photo.php?fbid=572185629619219&set=gm.582897088561837&type=3

தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு

Image

ஆமை சொல்லும் இரகசியம்

Image
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொ...

இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வழிகள்.

Image
இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன ? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் ? முன்னுரை : தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் " தமிழ் மொழி " தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான். செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்புகளையும் அவை எவ்வாறு குறைந்தது என்பதையும் காண்போம். குமரிக்கண்டம் : குமரிக்கண்டத்தில் தான் உலகின் முதல் மாந்தன் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு தான் தமிழ் மொழியும் பிறந்துள்ளது. இன்று தனி நாடுகளாக இருக்கும் ஆஸ்திரேலியா , தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் பல தீவுகள் எல்லாம் சேர்ந்து பிரம்மாண்டமாக இருந்த இந்த குமரிக்கண்டம் , இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருகிறது...