எது உலக அதிசயம்?
ஒரு பெரிய குழு, தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தார்கள், பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா? ஏன் இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுத...