Posts

Showing posts from October, 2016

பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே !

Image
ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள்! எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும். கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம். கி.மு - 2600 : எகிப்திய தமிழினத்தவராகிய மாயர்களால் பிரமிடுகள் வேலை ஆரம்பம். "இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் 'இடுகாடு' என்று அழைக்கப் பட்டது. சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது "சிறு இடு". மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர். பெரும் + இடு = பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது. தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து, பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் இதற்கு ச

பழைய இந்து - சீனத்து நாணயத்தாள்

Image
இது வெளியிடப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இதில் 5 என்பது தமிழ் எண்ணிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம். #Credit:  https://www.facebook.com/tamilnationality/photos/a.1031076660246827.1073741828.1030820220272471/1234585596562598/?type=3&theater

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம்

Image
தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !. பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்தும் உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள். ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !. திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப

இலங்கை பூர்வகுடி தமிழர்கள்...

Image
வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு. விஜயன் இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது. விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:- "வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்! பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார். சிங்கபாகு, சிகாசிவ