Posts

Showing posts from June, 2016

ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்

Image
கி.பி.(700-720) 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. தமிழ் நாட்டின் முதல் கருவறைமேல் விமானம் தாங்கிய கோயில் பல்லவர்கள் குடவரைகோயில்கள் வடிவத்திலிருந்து மாறி புதியவடிவத்தை கண்டுபிடித்தனர், அதுதான் மணற்கற்கல்(sand stone). இந்த கோயில் முழுவதும் மணற்கற்களால் மட்டுமே கட்டப்பட்டதுள்ளது. இந்த கோயிலை பார்த்தப்பிறகுதான் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் நான்கு வகையான கல்வெட்டு எழுத்துகள் உள்ளன 1.நாகரி எழுத்து 2.கிரந்தம் எழுத்து 3.நன்குஅலங்கரிக்கப்பட்டகிரந்தம் எழுத்து 4.பூ வேலைப்பாடு கொண்ட கிரந்தம் எழுத்து பல்லவ மன்னன்ர்கள், சோழ மன்னன்ர்கள், விஜயநகர மன்னன்ர்கள், முகாலாய மன்னன்ர்கள் யாருமே இந்த கோயிலை சேதபடுத்தவில்லை. எங்கு பார்த்தாளும் பிரமிப்பு. வாழ்க்கையில் ஒருமுரையேனும் ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில் வந்துபாருங்கள். -அறம் கிருஷ்ணன் #Credit :  https://www.facebook.com/tamilnationality/

உலகில் மதங்கள்

Image
இந்து, கிறீஸ்தவ, பௌத்த, இஸ்லாமிய, சமண, யூத மதங்கள் உருவாகிய விதங்கள் பற்றி ஒரு சில வரிகளில் அறிவோம்... இந்து மதம்: இந்தியாவில் காலம் காலமாகப் பலவிதமான தெய்வங்களை, வேறு வேறு சமயப் பெயர்களுடன் வணங்கி வந்தவிடத்து, பிற்காலத்தில் இத்தெய்வங்களிடையே மாமன், மாமி, கணவன், மனைவி, அண்ணன், தங்கை எனப் பல உறவுமுறைகளை உருவாக்கி, அந்தப் பொதுவான அமைப்பினை இந்து மதம் என்று அழைக்கலாயினர். அச்சமயங்களில் முதன்மையாய் நின்றிருந்தது சைவ சமயமாகும். சைவ சமயத்தைச் ஸ்தாபித்தவர் என்று ஒருவரும் இலர். ஒரு 5, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்காலாம். கி.மு.2500-1500 ஆண்டு காலத்தில் இருந்த சிந்து வெளி நாகரிக காலத்திலேயே சிவலிங்க வழிபாட்டை ஒத்த வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன. கி.மு.1500-500 களில் வேதங்கள் எழுதப்பட்டன. பின்னர், கி.மு.500-கி.பி.500 களில்புராண இதிகாசங்கள் இயற்றப்பட்டன. கி.பி. 500-1500 புராணங்கள் பாடப்பட்டன. இச்சமயத்தை வளர்த்தவர்கள் ரிஷிகள், சமய குரவர்கள், ஆழ்வார்கள் என்று பலர் இருந்தனர். இறைவன் ஆதியும், அந்தமும் இல்லாதவர், உருவமோ, அருவமோ அற்றவர். எங்கும் நிறைந்தவர், எல்லாமாயே இருப்பவர

சுயத்தை இழந்த இந்தியம்.

Image
மொஹமத் கஜினி இந்தியாவின் மீது தொடர்ந்து 18 முறை படை எடுத்தான் என்பதை நாம் பெருமையாக வரலாற்று நூல்களில் படிக்கிறோம். போஜ தேவர் என்கிற மன்னர் மொஹமத் கஜினியை தொடர்ந்து 17 முறை தோற்கடித்தார். அதை பற்றி நாம் யாருமே பேசுவது இல்லை. ஜெப்பான் சாமுராய் வீரர்களை பற்றி நாம் மிக பெருமையாக பேசுகிறோம். ஆனால்? ஜெப்பான் சாமுராய் வீரர்களின் முன்னோடிகளாக இருந்தது ராஜேந்திர சோழனின் வாள் முதுகு படை. ஆம். ராஜேந்திர சோழனின் படை மலேசியா, சிங்கப்பூர், ஜெப்பான் வரை ஆதிக்கம் செலுத்தியது. ராஜேந்திர சோழனும், அலெக்சாண்டரை விட மிகப்பெரிய நிலபரப்பை ஆண்ட செங்கிச்கானும் சம காலத்தவர்கள். ராஜேந்திர சோழன், செங்கிஸ்கான் இருவரும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டிருந்தால் வரலாறே மாறி போய் இருக்கும். செங்கிஸ்கான் வசம் இருந்த ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ராஜேந்திர சோழனின் காலடிக்கு வந்து இருக்கும். ராஜேந்திர சோழனின் படையில் இருந்த ராணுவ வீரர்கள் எவ்ளவு? பேர் தெரியுமா. 9 லக்ஷம் பேர். அன்றைய கால கட்டத்தில். அன்றைய மக்கள் தொகையில் எந்த மன்னரின் படையிலுமே இவ்வளவு ராணுவ வீரர்கள் இருந்ததில்லை. Umayyad Caliphate என்கிற சாம்ரா