Posts

Showing posts from February, 2016

தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு

Image

ஆமை சொல்லும் இரகசியம்

Image
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொ

இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வழிகள்.

Image
இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன ? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் ? முன்னுரை : தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் " தமிழ் மொழி " தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான். செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்புகளையும் அவை எவ்வாறு குறைந்தது என்பதையும் காண்போம். குமரிக்கண்டம் : குமரிக்கண்டத்தில் தான் உலகின் முதல் மாந்தன் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு தான் தமிழ் மொழியும் பிறந்துள்ளது. இன்று தனி நாடுகளாக இருக்கும் ஆஸ்திரேலியா , தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் பல தீவுகள் எல்லாம் சேர்ந்து பிரம்மாண்டமாக இருந்த இந்த குமரிக்கண்டம் , இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருகிறது

எது உலக அதிசயம்?

Image
ஒரு பெரிய குழு, தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தார்கள், பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா? ஏன் இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுத

வெள்ள அபாயத்தை அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்!!!

Image
தமிழனின் அறிவியல்!!! இன்றைக்கு செயற்கைகோள்கள் இருக்கின்றன. ரமணன் இருக்கிறார், வானிலை எச்சரிக்கையை சொல்ல. அன்றைக்கு இரண்டுமே இல்லை. ஆனால், தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.  தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெ ளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும். இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள். சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு